சினிமாவில்..
தமிழ் சினிமாவில் தத்ரூபமாக இயக்கும் படங்கள் ஒருசில இயக்குனர்களிடமே இருக்கிறது. அதை சிறப்பாக செய்து முடிப்பவர் தான் இயக்குனர் பாலா. நடிகர் நடிகைகளிடன் இதுதான் நடிப்பு என்று கூறி கஷ்டங்களை கொடுத்து நடிக்க வைத்து தேசிய விருது வாங்கும் அளவிற்கு படத்தினை அதட்டி உருட்டி எடுத்துக்காட்டுவார்.
அப்படி நடிக்கும் கலைஞர்களை அடிக்கவும் செய்திருக்கிறார் பாலா. அந்தவகையில், விக்ரம் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றிப்படமக அமைந்தது சேது. இப்படத்தில் நடிகை அபிதா ஹீரோயினாக நடித்திருப்பார். இப்படத்திற்கு பிறகு எந்த வாய்ப்பும் இல்லாத விரக்தியில் சின்னத்திரை சீரியல் பக்கம் சென்றுவிட்டார்.
அதற்கான காரணத்தை தற்போது பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். சேது படத்தின் போது நடன காட்சிகள் இருந்ததால் என்னால் நடனம் தெரியாமல் கஷ்டப்பட்டேன். எனக்கு ஆடத்தெரியாது.
இதனால் கோபத்தில் இயக்குனர் பாலா செட்டிலேயே அனைவர் முன்னிலையிலும் என்னை கண்டபடி திட்டிவிட்டார் எனக்கு கோபம் வந்து படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறினேன். என் அம்மா சமாதானம் செய்த பிறகு தான் மீண்டும் பாலாவிடம் மன்னிப்பு கேட்டு நடிக்க ஆரம்பித்தேன்.
உன் நல்லதுக்கு தான் சொல்கிறேன் என்று கூறி நடிக்க வைத்தார் பாலா. இதன்பின் இப்படத்திற்கு பின் வாய்ப்புகள் வரவில்லை என்பதால் சின்னத்திரை பக்கம் சென்று திருமதி செல்வம் உள்ளிட்ட சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன்.
அதில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளேன் என்று கூறியுள்ளார். இதேபோல் பாலா சமீபத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் படத்திலும் சில பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.