மஹேல ஜயவர்தனவிற்கும் கிரிக்கெட் சபைக்கும் இடையில் கடும் கருத்து முரண்பாடு!!

422

Mahela

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஸ்ட வீரர் மஹேல ஜயவர்தனவிற்கும், கிரிக்கெட் சபைக்கும் இடையில் கடும் கருத்து முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.

மஹேல ஜயவர்தன மற்றும் கிரிக்கெட் சபை உறுப்பினர்களினால் பரிமாறிக் கொள்ளப்பட்ட மின்னஞ்சல்கள் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

அண்மையில் பங்களாதேஸில் நடைபெற்று முடிந்த சர்வதேச கிரிக்கட் பேரவையின் T20 உலகக் கிண்ணப் போட்டிகளின் போது மஹேல மற்றும் சங்கக்கார சர்வதேச T20 போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர் என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

இது தொடர்பிலேயே சர்ச்சை எழுந்துள்ளது. கிரிக்கெட் சபைக்கு அறிவிக்காமல் ஓய்வு குறித்து ஊடகங்களில் அறிவித்தமை ஒழுக்க மீறலாகும் என கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

எனினும் ஊடகங்களுக்கு அவ்வாறான கருத்துக்களை வெளியிடவில்லை எனவும், கிரிக்கெட் சபை தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்டு வருதாகவும் மஹேல ஜயவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

கிரிக்கெட் சபை அதிகாரிகள் முன்னுக்கு பின் முரணான கருத்துகக்களை வெளியிட்டு வருகின்றமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மஹேல கிரிக்கெட் சபையின் செயலாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் தெரிவுக்குழு தலைவர் ஆகியோருக்கு தமது அதிருப்தியை வெளியிட்டு மின்னஞ்சல்களை அனுப்பி வைத்துள்ளார்.

மஹேலவின் மின்னஞ்சலுக்கு குறித்த அதிகாரிகளும் பதிலளித்துள்ளனர். இந்த அனைத்து மின்னஞ்சல்களும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இரு தரப்பிற்கும் இடையிலான முரண்பாடு இலங்கை கிரிக்கெட் துறையை மோசமாக பாதிக்கக் கூடும் என கிரிககெட் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.