காருக்குள் குடும்பத்துடன் தீவைத்துக்கொண்ட தொழிலதிபர் : கிடைத்த நெஞ்சை உலுக்கும் கடிதம்!!

1976

மஹாராஷ்டிராவில்..

இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் தொழிலதிபர் ஒருவர் நிதி பிரச்சனையால் தனது காரில் குடும்பத்துடன் தீ வைத்துக்கொண்டார். நாக்பூர் நகரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் தொழிலதிபர் உயிரிழந்தார், ஆனால் காரில் இருந்து இறங்கிய அவரது மனைவியும் மகனும் பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பினர்.



சாலையில் கார் எரிந்து கொண்டிருப்பதைக் காட்டும் பயங்கரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர், ஆனால், தொழிலதிபர் காரில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி தீயில்கருகி உயிரிழந்தார்.

58 வயதான தொழிலதிபர் ராம்ராஜ் பட், தனது குடும்பத்தினரை ஒரு ஹோட்டலில் மதிய உணவிற்காக வெளியே அழைத்துச் சென்று, பின்னர் தனது காரை வெகுதூரம் ஓட்டிச் சென்றறு ஒரு சாலையில் திடீரென நிறுத்தியதாக கூறப்படுகிறது.

பின்பு, அவர் தன் மீதும், மனைவி மற்றும் மகன் மீதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர்கள் எதிர்வினையாற்றுவதற்கு முன், அவர் அவர்களுடன் சேர்த்து தீவைத்துக்கொண்டார்.

இதில் ராம்ராஜ் பட் உயிரிழந்தார். அவரது மனைவி சங்கீதா பட் (57) மற்றும் மகன் நந்தன் (25) ஆகியோர் எப்படியோ கதவுகளைத் திறந்து காரில் இருந்து குதித்தனர், ஆனால் அவர்களும் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

எரிந்த காரில் ஒரு பிளாஸ்டிக் பைக்குள் ஒரு குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது, அதில் வணிகர் தனது நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக எழுதியுள்ளார் என்று பொலிஸார் கூறுகின்றனர்.