யூரியா உரம் விநியோகம்..
வவுனியா மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து கமநல சேவை திணைக்களத்தினருக்கு கிடைக்க பெற்ற 49.5 மெட்ரிக்தொன் உரத்தினை விவசாயிகளுக்கு பங்கிட்டு வழங்கும் நடவடிக்கை கமநல சேவை திணைக்கள அலுவலக உதவியாளர் எம்.கிருஸ்குமார் தலமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
50 நாட்களுக்கு குறைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு 40 கிலாே யூரியாவும் 50 நாட்களுக்கு மேற்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 20 கிலோ யூரியாவும் ஒரு கிலோ யூரியா 200 ரூபாய் வீதம் 20 கிலோ என்ற விகித்தின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றது.
அரசாங்கத்தினால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரமே விவசாயிகளுக்கு இவ்வாறு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த உரம் வழங்கும் முதற்கட்ட நடவடிக்கை செட்டிக்குளம், அருவித்தோட்டம், நேரியகுளம், பெரியநொச்சிக்குளம் ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தனியார் கடைகளில் 50 கிலோ யூரியா 38 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையில் விற்பனையாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.