ஆபத்தான மூன்று நபர்கள் : தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை!!

1412

ஆபத்தான மூன்று நபர்கள்..

பெண்கள் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் இந்த சந்தேக நபர்கள் தேடப்பட்டு வந்துள்ளனர்.

400 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஆண் மற்றும் பெண் ஆகிய இரு சந்தேகநபர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, போதைப்பொருள் விநியோகம் மற்றும் விற்பனையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் எனவும் அவர்கள் 33, 27 மற்றும் 33 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பில் பொதுமக்கள் 071-8592727 – 011-2343333/4 அல்லது 071 – 8591881 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.