பாலத்தில் இருந்து கவிழ்ந்த பேருந்து…பலி எண்ணிக்கை உயரும் அபாயம்!!

598

கென்யாவில்..

கென்யாவில் ஞாயிற்றுக்கிழமை மதியம் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் 30 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் நைரோபியில் இருந்து பிரதான நெடுஞ்சாலை உள்ள மெரு நகரின் ஆற்றுப் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் சென்று கொண்டு இருந்த பேருந்து தீடிரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து விழுந்து கவிழ்ந்தது.

இதில் 30 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரி தெரிவித்த தகவலில், பாலத்தில் பேருந்து வேகமாக வந்து இருப்பதால், பிரேக் பழுதடைந்து விபத்து ஏற்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இத்துடன் விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து வெளிவந்துள்ள புகைப்படங்களின் அடிப்படையில், பேருந்து ஆற்றுப் பாலத்தில் இருந்து கவிழ்ந்து நொறுங்கியது இருப்பதும், அதில் சிக்கி இருப்பவரை மீட்புக் குழுவினர்கள் காப்பாற்ற முயற்சிப்பதும் இடம்பெற்றுள்ளது.

மாலை 6:30 மணிக்கு இந்த விபத்தி ஏற்பட்டதால் போதிய வெளிச்சமின்மை காரணமாக மீட்புப் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கென்யாவில் குறுகிய சாலைகள் மற்றும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களால் இத்தகைய விபத்து ஏற்பட்டு வருவதாக பொலிஸார் குற்றம்சாட்டி வருகின்றனர்.