என் மகன் அடித்த லூட்டிக்கு முன்பு தோற்று விட்டேன் : கார்த்திக்!!

458

Karthikகடல் படத்தை அடுத்து கெளதமின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் என்னமோ ஏதோ. தெலுங்கில் வெளியான ஆலா மொதலாயிந்தி என்ற படத்தின் ரீமேக்தான் இப்படம். இதில் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங், நிகிஷா பட்டேல் என்ற இரண்டு கவர்ச்சி பொம்மைகள் நடித்திருக்கிறார்கள்.

கதைப்படி, இவர்கள் இருவரையும் மாறி மாறி காதலிப்பதுதான் கெளதமிற்கு வேலையாம். ஆனால், எதற்காக அவர்களை அப்படி காதலித்தார் என்பதில் ஒரு சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்களாம்.
ஆக, அப்பா நவரசநாயகன் கார்த்திக் ரொமான்டிக் காட்சிகளில் பின்னி பெடலெடுத்ததை விட பலமடங்கு எகிறி அடித்து சிக்சர் போட்டிருக்கிறாராம் கெளதம்.

படத்தைப்பார்த்த நவரசநாயகன், இதுவரை தமிழ் சினிமாவில் ரொமான்டிக் காட்சிகளில் என் இடத்தை பிடிக்க ஆளில்லை என்றுதான் இறுமாப்புடன் இருந்தேன்.

ஆனால் அதை இப்போது என் மகன் கெளதம் பிடித்து விட்டான் என்று சொல்லி புழகாங்கிதமடைந்தாராம் கார்த்திக். அதோடு, நான் நடிகைகளுடன் அடித்தெல்லாம் ஒரு லூட்டியா, என் மகன் கெளதம் அடித்த லூட்டிக்கு முன்பு நான் தோற்று விட்டேன் என்றாராம்.