விமானம் புறப்படுவதற்கு முன்னர் பலவந்தமாக இறக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இளைஞன்!!

1219

தனிஸ் அலி..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமானத்தில் இருந்து குடிவரவு அதிகாரிகளால் கீழ் இறக்கப்பட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்த முயன்ற தனிஸ் அலி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் துபாய் செல்ல முயற்சித்த போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.