மஹேல ஜெயவர்தன- சங்கக்கார மீதான ஒழுக்காற்று நடவடிக்கை திட்டம் கைவிடப்பட்டது!!

502

Mahela

குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் மீது நடத்த தீர்மானிக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

T20 உலகக் கிண்ணம் வென்று நாடு திரும்பிய இலங்கை அணி கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளை விமர்சிக்கும்படி மஹேல மற்றும் சங்கா ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஓய்வை தங்களுக்கு அறிவிக்காமல் ஊடகங்களுக்கு முதலில் அறிவித்தமையால் கிரிக்கெட் நிறுவன உயர் பீடம் இவ்விரு வீரர்களுக்கும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட தடை விதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒழுக்காற்று விசாரணை முடிவு கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.