கனடாவிற்கு சுற்றுலா சென்றபோது மாயமான குடும்பஸ்தருக்கு நேர்ந்த பரிதாபம் : கண்ணீரில் மனைவியும் மகளும்!!

1838

கனடாவில்..

கனடாவில் தேசிய பூங்கா ஒன்றிற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இந்தியர் ஒருவர் மாயமான நிலையில், தற்போது அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை, சச்சின் (Sachin Kadam, 42) தனது நண்பர்களுடன் Elk Island தேசிய பூங்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவரும் மற்றொரு நண்பருமாக நின்றபடி துடுப்புப் போடும் paddle boarding என்ற விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.

அப்போது நண்பர் பார்க்க முடியாத தொலைவுக்குச் சென்றுவிட்டிருக்கிறார் சச்சின். அதற்குப் பிறகு சச்சினை யாரும் பார்க்கவில்லை. சச்சின் தன் மனைவி மற்றும் மகளுடன் 2014ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கனடா வந்துள்ளார்.

கடின உழைப்பாளியான சச்சின், தன் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறையும் நண்பர்கள் மீது ஆழ்ந்த நட்பும் கொண்டவராம். சச்சினுடைய இழப்பு, அவரது மனைவி, இளவயது மகள் மற்றும் நண்பர்களை கடும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.