சமூக வலைதளமான, பேஸ்புக் மூலம் நட்பை துண்டிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின், கொலராடோ டென்வர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் ஆய்வுநடத்தி, பல விதமான தொடர்புகள் துண்டிக்கப்படுவதை கண்டுபிடித்து உள்ளனர்.
பெரும்பாலானோர் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்கும், பணியிடத்து நண்பர்களின் தொடர்பை துண்டித்து உள்ளதாகக் கூறி உள்ளனர்.
இதுகுறித்து, ஆய்வு நடத்திய, கிறிஸ்டபர் சிபோனா கூறுகையில், மதம் அல்லது அரசியல் சம்பந்தமான தேவையில்லாத கருத்துகளை பேஸ்புக் வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்வதை விரும்பாதவர்கள், அத்தகைய நண்பர்களுடனான தொடர்புகளை, துண்டித்து கொள்கின்றனர் என்றார்.