படப்பிடிப்பில் சூர்யாவுக்கு பலத்த அடி : ஊன்றுகோலுடன் வாக்களிக்க வந்த சூர்யா!!

554

Surya

அஞ்சான் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியின் போது சூர்யா எதிர்பாராமல் விபத்துக்குள்ளாகி கடுமையாக காயமேற்படுத்திக் கொண்டார் என இரு தினங்களாக ஊடகங்களில் பரபரக்கின்றன.

படப்பிடிப்பு இரத்துச் செய்யப்பட்டதாகக் கூட செய்திகள் வெளியாகின. ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

கோவாவில் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை பிரமாண்டமாக எடுத்து வந்தது உண்மைதான். சண்டைக் காட்சியின் போது எதிர்பாராத விதமாக ஸ்டண்ட் நடிகர் ஒருவர் சூர்யாவின் மீது விழுந்திருக்கிறார். அதில் சூர்யாவுக்கு சின்னதாக காயம் ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவமனை சென்று முதலுதவி எடுத்தபின் சூர்யா வழமைக்கு திரும்பிவிட்டார். படப்பிடிப்பும் தொடர்ந்து நடக்கிறது. இந்த சின்ன காயத்தைதான் சிலர் ஊதி பெரிதாக்கிவிட்டனர் என்று படக்குழுவும், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவும் தெரிவித்தனர்.

அஞ்சான் படத்தை தனது திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயாரித்து இயக்கி வருகிறார். சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன் இசை. சமந்தா நாயகி. ஆகஸ்ட் 15 சுதந்திரத்தினத்தன்று படத்தை வெளியிடுகின்றனர்.