படப்பிடிப்புகளை ரத்து செய்து ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர்கள்!!(படங்கள்)

481

ஒட்டு போடுவதற்காக நடிகர்கள் பலர் இன்று படப்பிடிப்புகளை ரத்து செய்தார்கள். கமல் நடிக்கும் உத்தமவில்லன் படப்பிடிப்பு பெங்களூரில் இடைவிடாது நடந்து வருகிறது. இதற்காக கமல் அங்கு முகாமிட்டு நடித்து வந்தார். ஓட்டு போடுவதற்காக படப்பிடிப்பை இன்று ஒருநாள் மட்டும். ரத்து செய்து விட்டு சென்னை வந்தார். ஓட்டு போட்டுவிட்டு இன்று மாலையே பெங்களூர் புறப்பட்டு செல்கிறார்.

இதுபோல் அஞ்சான் படப்பிடிப்புக்காக சூர்யா மும்பையில் இருந்தார். அவரும் ஓட்டு போடுவதற்காக இன்று காலை சென்னை வந்தார். மாலையே மும்பை புறப்பட்டு செல்கிறார். விஜய் கத்தி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடக்கிறது. ஓட்டுபோட அவரும் இன்று ஒருநாள் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

கார்த்தி விளம்பர படமொன்றில் நடிக்க மும்பை சென்று இருந்தார். இன்று படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை வந்து ஓட்டு போட்டார்.

1 2 3 4 5