இலங்கை வம்சாவளி தமிழ் யுவதிக்கு டி.இமான் வழங்கிய சந்தர்ப்பம்!!

860

அஷ்னா சசிகரன்..

லண்டன் வாழ் இலங்கை வம்சாவளியை சேர்ந்த தமிழ் யுவதிக்கு டி.இமான் தனது திரைப்படத்தில் பாடல் பாட வழங்கிய சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்.



இலங்கையைச் சேர்ந்தவரும் லண்டனில் வசிப்பவருமான அஷ்னா சசிகரன் என்ற பாடகியையே இவ்வாறு டி.இமான் அறிமுகம் செய்துள்ளார்.

அதன்படி பிரபல நடிகரான பிரபுதேவாவின் பொய்க்கால் குதிரை படத்தில் அஷ்னா சசிகரன், “ வழி இதுதானா..” என்ற பாடலைப் டி.இமான் பாடவைத்துள்ளார்.

அதேவேளை வளர்ந்துவரும் இளம் கலைஞர்கள் பலருக்கு டி. இமான் சந்தர்ப்பம் வழங்கி வரும் நிலையில் தற்போது இலங்கை பின்னனியை கொண்ட அஷ்னா சசிகரனையும் அறிமுகப்படுத்தியுள்ளமை புலம்பெயர் தமிழ்ர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.