திருச்சி விமான நிலையத்தில் இலங்கை பெண்ணிடம் தங்கம் பறிமுதல்!!

539

Gold

இலங்கையில் இருந்து திருச்சி சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பெண்ணிடம் இந்திய 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சியில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்பட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறன.

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து திருச்சிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மதியம் சென்றது. இதில் பயணித்த பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடைமைகளை குடிவரவு மற்றும் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பெண் அணிந்திருந்த நகையில் சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அந்த பெண் அணிந்திருந்த செயின் மற்றும் வளையல்களை சோதனை செய்தபோது, கலப்படம் இல்லாமல் சுத்த தங்கத்தில் செய்து கடத்தி வந்தது தெரிந்தது.

இதையடுத்து அந்த பெண்ணிடம் இருந்து இந்திய 11 லட்சம் மதிப்புள்ள 396 கிராம் தங்கத்தை பொலிசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குறித்த பெண் கொழும்பை சேர்ந்த ஸ்ரீவாணி (44) என தெரிய வந்தது. தொடர்ந்து ஸ்ரீவாணியிடம் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்போது பெண்கள் மூலம் தங்கம் கடத்தல் நடக்கிறது. அவர்களுக்கு செயின் மற்றும் வளையல்களை செய்து அணிவித்து கடத்தி வந்து பின்னர் அவற்றை அதிக விலைக்கு விற்று விடுகின்றனர் என்றனர்.