
தமன்னாவை விரைவில் நீச்சல் உடையில் பார்த்து இரசிக்கலாம்… தமிழ், தெலுங்கில் அல்ல ஹிந்தியில். ஹம்ஷகல்ஸ் என்ற ஹிந்திப் படத்துக்காக நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார் தமன்னா. தமிழ், தெலுங்கில் சற்று கவர்ச்சியாக நடித்திருந்த தமன்னா, நீச்சல் உடை போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கிட்டத்தட்ட சபதமே செய்திருந்தார்.
உடை விஷயத்திலும், திரையில் நாயகர்களோடு நெருக்கம் காட்டுவதிலும் எனக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறேன். அவற்றை மீற மாட்டேன் என்று கூறி வந்தார் அவர்.
ஆனால் ஒரு ஹிந்திப் படத்துக்காக இந்தக் கொள்கையை கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டாராம் தமன்னா.
இப்படத்தில் தமன்னாவுடன் இணைந்து சயீப் அலிகான், பிபாசா பாசு, ரிதேஷ் தேஷ்முக் நடிக்கின்றனர். சாஜித்கான் இயக்குகிறார்.
முதலில் இந்தக் காட்சியில் நடிக்குமாறு தமன்னாவை வற்புறுத்தாமல், ஜஸ்ட் சொல்லி வைத்தாராம் இயக்குனர். ஆனால் தமன்னாவோ, இயக்குனரின் அணுகுமுறையை மெச்சி உடனே நீச்சல் உடையில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.





