கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற காருக்கு நேர்ந்த கதி!!

806

கொழும்பு..

கொழும்பு எரிபொருள் நிலையம் ஒன்றில் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது இரும்பு கம்பி ஒன்று உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.



கொழும்பு சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற போது திடீரென பாரிய இரும்பு ஒன்று ஜன்னலை உடைத்து உள்ளே விழுந்துள்ளது.

இரும்பு கம்பி வாகனத்தினுள் இருந்த மோட்டார் வாகனத்தின் செஸியையும் உடைத்துள்ளது. அந்த இரும்பு கம்பி 19 அடி நீளமானதென தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் வாகனத்திற்குள் இருந்த சாரதியின் காலில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.