பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு 7 வருட சிறைத் தண்டனை!!

599

Jailபெண் ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 7 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.

34 வயதான பெண் ஒருவரை பலாத்காரத்திற்கு உட்படுத்திய சம்பவம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5,000 ரூபா தண்டம் மற்றும் ஒரு லட்சம் ரூபா நஸ்ஈடும் வழங்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

தண்டப்பணம் வழங்காதுபோனால் மேலும் மூன்று மாத சிறைத்தண்டனையும் நஸ்டஈடு வழங்காதுபோனால் மேலும் 6 மாத சிறைத்தண்டனையும் வழங்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கொன்கஹவத்த பிரதேசத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய குறித்த பெண் கடந்த 2004ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.