திருவொற்றியூரில்..
திருவொற்றியூர் அருகே காணாமல் போனதாக நாடகமாடி மனைவியை கொலை செய்த கணவன் திடுக் தகவல். சென்னை, திருவொற்றியூர், பூங்காவனபுரத்தை சேர்ந்தவர் மணிமாறன்.
இவரது மனைவி மைதிலி (36). இவர், மாநகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த புதன்கிழமை அன்று, மைதிலி உறவினர் வீட்டுக்கு சென்றவர், திடீரென மாயமாகி விட்டார். அவரை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, மணிமாறன், திருவொற்றியூர் காவல் நிலையத்தில், மைதிலி காணவில்லை என புகார் அளித்தார். போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, மணலி புதிய மேம்பாலம் அருகில், மைதிலி இறந்து கிடந்தார். அவரை கொன்று, உடலை அங்கு வீசியது தெரியவந்தது. போலீசார், மைதிலி உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
கணவர் மணிமாறனிடம் விசாரணை நடத்தியதில், மைதிலிக்கு, ஜெய்சங்கர் என்பவருடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது. ஜெய்சங்கரை பிடித்து விசாரித்ததில், கடந்த புதன் கிழமை அன்று, தன்னுடன் பைக்கில் மைதிலி வந்தார்.
எல்லையம்மன் கோயில் அருகே, மணிமாறன் எங்களை பார்த்து விட்டார். எங்களிடம் சண்டைப்போட்டார். என் பைக்கின் சாவியை பிடுங்கி வைத்துக்கொண்டு, மைதிலியை கோபமாக அழைத்து சென்றார் என போலீசில் அவர் கூறினார். பின்னர், மணிமாறனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, மணிமாறன், மைதிலி, ஜெய்சங்கரின் தொடர்பை விட மறுத்தார், சம்பவத்தன்று, மைதிலியை, மணலி, புதிய மேம்பாலம் அருகில் அழைத்து சென்று, எவ்வளவோ புத்திமதி கூறினேன், ஆனால், கள்ளத்தொடர்பை விட மறுத்தார். ஆத்திரத்தில், அவரின் சேலையால், மைதிலி கழுத்தை இறுக்கி கொன்றேன். அங்கேயே உடலை போட்டு விட்டு, காணமால் போனதாக நாடகமாடினேன் என கூறினார்.
தொடர்ந்து அவரை க்ரைம் சீன் இடத்துக்கு அழைத்து சென்ற போலீசார் கொலை செய்த சம்பவத்தை விவரிக்க செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.