ஆசிரியர் அவமதித்ததால் பள்ளி மாணவர் எடுத்த விபரீத முடிவு : கதறும் தாய்!!

1445

ஆந்திராவில்..

குண்டூர் ரயில்பேட்டை பகுதியைச் சேர்ந்த அஞ்சம்மா, கணவரை இழந்த நிலையில் கூலி வேலை செய்து தனது இரண்டு மகன்களையும் படிக்க வைத்தார். அவரது இளைய மகன் ஆகாஷ்(18) அரசுப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.

அவர் ஒழுங்காக படிப்பதில்லை என அவரது ஆசிரியர் அடிக்கடி திட்டி வந்ததாகத் தெரிகிறது. கடந்த வாரம் ஆகாஷ் தனது நண்பர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆசிரியர் படிக்காதவனுக்கு சாப்பாடு எதற்கு? எனக்கூறி கையிலிருந்த சாப்பாட்டை பிடுங்கியதாக கூறப்படுகிறது.

ஆசிரியர் அவமதித்தது தொடர்பாக ஆகாஷ் தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். அவரைத் தேற்றிய தாயார் மீண்டும் ஆகாஷை பள்ளிக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் இரண்டு நாட்களாக பள்ளிக்குச்செல்லாத ஆகாஷ் நேற்று யாரும் வீட்டில் இல்லாத சமயத்தில் தூக்கிட்டுத்தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.