எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி : அதிர்ச்சி சம்பவம்!!

1424

அசாம் மாநிலத்தில்..

எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்ட சிறுமி ஒருவர் காதலை நிரூபிக்க காதலனின் இரத்தத்தை தனது உடலில் செலுத்திக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



இந்தியாவின் அசாம் மாநிலத்தில், வசிக்கும் 15 வயது சிறுமிக்கும், எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.

இருவருக்குமான பிணைப்பு நாளுக்கு நாள் வலிமையாக, ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை என்று கூறும் நிலைக்கு வந்துள்ளனர். சில நாட்கள் அந்த சிறுமி காதலனுடன் ஓட்டம் பிடித்திருக்கிறார். அப்போது அவர்களின் பெற்றோர் தான் வீட்டிற்கு சிறுமியை மீண்டும் அழைத்து வந்துள்ளனர்.

ஆனால், இந்த முறை அந்த 15 வயதான சிறுமி இதுவரை யாரும் கற்பனை கூட செய்யமுடியாத அளவிற்கு ஒரு செயலை செய்துள்ளார். அதாவது அந்த பெண் யாரும் பிரித்துவிட முடியாத படி தனது காதலனின் HIV பாதிப்பு இருக்கும் ரத்தத்தை தனக்குள் செலுத்திக்கொண்டுள்ளார்.

இதனை அறிந்த ஊர் மக்கள் அதிர்ச்சியில் மூழ்க, போலீசார் காதலரான இளைஞரை கைது செய்துள்ளனர். மேலும் சிறுமி தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.