வவுனியாவில் சைவசமய விழுமியப் பண்புகள் சொற்பொழிவு!!

803

Vav

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்துகின்ற புண்ணிய கிராம வேலைத் திட்டத்தில் ஒரு நாள் நற்பண்பு செயலமர்வு வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பலர் பங்குபெறும் இச் செயலமர்வு நிகழ்வில் “சைவ சமய விழுமிய பண்புகள் என்னும் தலைப்பில் பிரபல சொற்பொழிவாளரும், ஆசிரியருமான சி.கஜேந்திரகுமார் உரை நிகழ்த்தவுள்ளார்.

இந் நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா கலந்து சிறப்பிக்கவுள்ளார்.