கர்நாடகாவில்..
அருந்ததி திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்த இளைஞர் அதில் வரும் அனுஷ்காவை போலவே தான் மறுபிறவி எடுப்போம் என நம்பி தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம் துமகூருவில் இந்த துயரம் அரங்கேறியுள்ளது.
அருந்ததி திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்த இளைஞர் அதில் வரும் அனுஷ்காவை போலவே தான் மறுபிறவி எடுப்போம் என நம்பி தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம் துமகூருவில் இந்த துயரம் அரங்கேறியுள்ளது.
சினிமா என்பது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு அம்சம், இரண்டு மணி முதல் மூன்று மணி நேரம் படம் பார்ப்பவர்கள் தங்களது கவலைகளை மறந்து படத்தை ரசிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு திரைப்படத்தின் நோக்கம், சிலர் திரைப்படங்களைப் பார்த்து விட்டு அதில் வரும் நடிகர்களைப் போலவே தங்களை பாவிதித்துக் கொள்கின்றனர்.
ஆனால் சினிமா வேறு வாழ்க்கை வேறு என்பதை அறியாத ரசிகர்கள் சினிமா ஹீரோ ஹீரோயின்களை இமிடேட் செய்து தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ளும் அவலத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
இதுபோன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் மதுகிரி தாலுகாவில் உள்ள கிட்டய்யனபாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது கல்லூரி மாணவர் ரேணுகா பிரசாத்.
இவர் தெலுங்கில் வெளியான அருந்ததி என்ற ஹாரர் திரைப்படத்தை பார்த்தார், அத்திரைப்படம் அவரை வெகுவாக கவர்ந்தது, இதனால் பலமுறை அவர் அத்திரைப்படத்தை பார்த்து வந்தார்.
அந்தத் திரைப்படத்தில் காட்டுவதை போல கதாநாயகி அனுஷ்கா தீ குளித்து மீண்டும் மறுபிறவி எடுத்து வருவதைப் போல தானும் எடுக்க முடியுமென கண்மூடித்தனமாக அந்த இளைஞர் நம்பினார். இதனையடுத்து புதன்கிழமை மாலை படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அவர், பெட்ரோலை வாங்கி உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அதில் உடல் முழுக்க தீ பரவியது, வலிதாங்க முடியாமல் அங்கும் இங்கும் ஓடினார், பின்னர் அங்கிருந்தவர்கள் மீட்டு அவரை விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனர். 60 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரேணுகா பிரசாத் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் புரவர அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்தார் ரேணுகா பிரசாத். மேற்படிப்புக்காக தும்கூர் வந்த அவர், அங்கு கல்லூரியில் சேர்ந்தார் பியூசி முதலாமாண்டு படித்து விட்டு படிப்பைப் பாதியில் நிறுத்திக் கொண்டார், ஒரு கட்டத்தில் சினிமாவுக்கு அடிமையானார்.
தினந்தோறும் சினிமா தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்து வந்தார், சமீபத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட் திரைப்படமான அருந்ததி திரைப்படத்தை 15 முதல் 20 முறை பார்த்துள்ளார், அதில் வரும் அனுஷ்காவை போல தாம் மறுபிறவி எடுக்க முடியும் என நம்பிய ரேணுகா பிரசாத் தீக்குளித்துள்ளார் என போலீசார் கூறியுள்ளனர்.
கிளிநொச்சி மண்ணின் மைந்தனின் நெஞ்சை வருடும் பாடல் – ஏன் பிறந்தோம் இறந்தோமின்றி எதையாவது செய்யுங்கள்