வாரத்தில் 5 நாட்களும் பாடசாலைகளை நடத்துவது குறித்து கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்!!

779

பாடசாலை..

இலங்கையில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பான அறிவிப்பொன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது.



அதன்படி நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது எதிர்வரும் 15ஆம் திகதி முதல் வாரத்தின் ஐந்து நாட்களிலும் வழமையான நேரத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்துடன் நாட்டில் கோவிட் தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில், பாடசாலைகள் தொடர்ந்து நடத்தப்படுமா என்பது குறித்து கல்வி அமைச்சர் முன்னதாக தெளிவுப்படுத்தியிருந்தார். அதன்படி கோவிட் தொற்று பரவினாலும் பாடசாலைகள் மீள மூடப்படாது என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மாணவரொருவர் கோவிட் தொற்றுக்கு உள்ளானால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திவிட்டு, கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.