
தமிழ்நாடு மட்டும் இல்லை இந்தியாவே எதிர் பார்க்கும் நடன கலைஞர் தான் பிரபுதேவா. இப்போது இந்தியாவே விரும்பும் இயக்குனர் கூட, இப்படி எல்லா துறையிலும் கொடிகட்டி பறப்பவர் இந்த நடனபுயல்.
ஆனால் அவருக்கு வந்த சோகத்தை பாருங்கள், அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் பொலிவுட் நட்சத்திரங்களின் விருது விழா நடக்கிறது. இதில் இந்தி படவுலக முன்னணி ஹீரோ, ஹீரோயின்கள் கலந்துகொள்கின்றனர்.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக பிரபுதேவாவும் ஒப்புக்கொண்டிருந்தார். அவருடன் 2 மகன்களும் செல்வதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விழா அமைப்பாளர்கள் பிரபுதேவாவின் பாஸ்போர்ட்டையும், மகன்களின் பாஸ்போர்ட்டையும் தவறவிட்டனர். இதையடுத்து பிரபுதேவா விழாவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
பிரபுதேவா இது தொடர்பாக சென்னை வந்து போலீசில் புகார் தர முடிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் உடனடியாக அதுபற்றி போலீசில் புகார் தர வேண்டும்.
நானும் என் மகன்களும் அமெரிக்காவில் நடக்கும் விருது விழாவில் பங்கேற்க முடிவு செய்து இருந்தோம் . அது நிறைவேறவில்லை. புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்துள்ளோம்.
அது கிடைக்க சில நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. அதுவரை ஷூட்டிங்கில் கவனம் செலுத்துவேன்‘ என்றார்.





