துணைக்கு யாருமே இல்லை என்ற விரக்தியில் 27 வயதான பெண் எடுத்த விபரீத முடிவு : மகள்கள் அனாதையான சோகம்!!

827

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல்லில் துணைக்கு யாரும் இல்லாத ஏக்கத்தில் இரண்டு மகள்களுக்கு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி ஊராட்சி ஓட்டநாகம்பட்டி புதூரை சேர்ந்தவர் ரஞ்சிதா (27).

இவர் திருமணமாகி கணவரை பிரிந்து தந்தை வீட்டில் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். சிறுவயதிலேயே தாயை இழந்த ரஞ்சிதா கணவருடனும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனது தந்தையின் வீட்டில் வசித்து வரும் நிலையில் தந்தையும் தம்பியும் கேரளாவில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், துணைக்கு யாரும் இல்லாத விரக்தியில் இருந்த ரஞ்சிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான காவல்துறையினர் ரஞ்சிதாவின் உடலை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனக்கு யாரும் இல்லை என்ற விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட ரஞ்சிதா,

தான் இறந்து விட்ட பிறகு தனது இரண்டு மகள்களுக்கும் யாருமே இல்லையே என்பதை நினைக்க மறந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்களையும், ஊர் மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.