அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட அஸ்வின்!!

426

Aswin

மத்திய அரசின் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் பெயரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து பிசிசிஐயின் விளையாட்டு வளர்ச்சிக்கான பொது மேலாளர் ரத்னாகர் ஷெட்டி கூறுகையில், அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்வதற்கு இறுதி நாளான ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்பு அஸ்வின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவரைத் தவிர மற்ற கிரிக்கெட் வீரர்கள் பரிந்துரை செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

அஸ்வின், 19 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பெருமைக்கு உரியவர். சுழலிலும் மட்டும் இல்லாமல், இக்கட்டான சூழலிலும் தனது பேட்டையும் அவர் சுழற்றத் தவறுவதில்லை. டெஸ்ட் போட்டிகளில் 104 விக்கெட்டுகளையும், ஒருநாள் ஆட்டங்களில் 109 விக்கெட்டுகளையும், இருபது ஓவர் போட்டியில் 25 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

அர்ஜுனா விருதை கடந்த ஆண்டு விராட் கோலி பெற்றார். இதுவரை ஒரு பெண் உள்பட 46 கிரிக்கெட் வீரர்கள் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.