மாணவி தற்கொலை : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

441

திருவாரூரில்..

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த பயிற்சி மருத்துவர் காயத்ரி கடந்த வியாழன் அன்று கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் அதன் பிறகு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்கொலை செய்துகொண்ட மாணவி மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், நேற்று திருவாரூர் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் நிஷா தலைமையில் சிபிசிஐடியினர் காயத்ரி தற்கொலை செய்து கொண்ட விடுதியில் அவருடைய அறைக்கு அருகில் இருந்தவர்கள், வார்டன் வாட்ச்மேன் உள்ளிட்டவர்களை விசாரித்தனர்.

மேலும், காயத்ரி தாய் தந்தையர் உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் அன்பரசன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடயவியல் நிபுணர்கள் பிணவறைக்கு வந்து பிரேதத்தை ஆய்வு செய்தார்கள்.

அவர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நம்மிடம் பேசிய காயத்ரியின் பெற்றோர், காயத்ரியின் இறப்புக்கு காரணம் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கும் வார்டன் கவனக்குறைவும் காரணம் என தெரிவித்தார்கள்.

மேலும், மருத்துவ கல்லூரி முதல்வரிடம் காயத்ரி ஒரு மாதம் விடுமுறை கேட்டதாகவும் குறைந்தபட்சம் 15 நாள் விடுமுறை கேட்டதாகவும் ஆனால் மருத்துவ கல்லூரி முதல்வர் கொடுக்க மறுத்ததாகவும் விடுமுறை அளித்து இருந்தால் என் மகளை நான் காப்பாற்றி இருப்பேன் என்று தெரிவித்தார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.