கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு 111 மாத சிறைத் தண்டனை!!

833

A13கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு 111 மாத சிறைத்தண்டனையும், 20 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பலபிட்டிய நீதவான் இந்தத் தண்டனையை விதித்துள்ளார்.

கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் குறித்த நபருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக நீதிமன்ற விசாரணைகளில் பங்கேற்காமல் தலைமறைவாகியிருந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 20,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அம்பலாங்கொடை மீட்டியாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான நபர் ஒருவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.