கறுப்பு தங்கத்துடன் ஒருவர் அதிரடியாக கைது!!

865

திருக்கோவில்..

புதையல் அகழ்வில் தோண்டி எடுக்கப்பட்ட கருப்பு தங்கம் என கூறி விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோரக்களப்பு குளத்திற்கருகில் தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவ தினமான நேற்று மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினரால் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் 24 வயதுடைய கோமாரி பகுதியை சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ரூபா 20 இலட்சம் பெறுமதியான 350 துண்டுகள் அடங்கிய 113 கிராம் 180 மில்லி கிராம் எடையுடைய ஒரு தொகுதி கறுப்பு பொன்நிற கற்கள் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.