வவுனியா ஊடகவியலாளர் எம்.ஜி.ஆர்.காந்தன் நடிப்பில் வெளியாகும் ‘பாலைநிலம்’ திரைப்படத்தின் இசை வெளியீடு!!

1530

இசை வெளியீடு..

பாலைநிலம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு திரைப்படத்தின் நடிகரும் தயாரிப்பு முகாமையாளருமான மகேந்திரசிங்கம் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.



யூட் சுகியின் தயாரிப்பு , இயக்கம், கதை, திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவில் ஈழத்தின் மண்வசனையுடன் தயாரிக்கப்பட்ட ‘பாலை நிலம்’ திரைப்படத்தின் பாடல்களை படத்தின் இசை அமைப்பாளர் கிருஸ்ணபிள்ளை பிரசாந் வெளியிட யாழ்ப்பாணத்தில் முதல் முதல் வெளியிடப்பட்ட ‘மர்மக்குழல்’ தொடர் நாடகத்தின் கதை, திரைக்கதை, இயக்குனர், அபயன் கணேஸ் பெற்றுக்கொண்டார்.

‘பாலைநிலம்’ திரைப்படத்தின் பாடல்களை ரதி , தனஞ்சயன் ரொனால் ஆகியோர் எழுதியிருந்தனர். பாடல்களை மடோனா, ஜெயந்தன், சுவர்னா, நிதுஷா, நிம்ஷா மற்றும் மதுபாலன் ஆகியோர் பாடியிருந்தனர்.

படத்தின் வர்ணக்கலவை தங்கவேல் சிவனேசன் , சண்டைப்பயிற்சி எம்.எஸ்.நந்தகுமார் ஆகியோர் பணியாற்றியிருந்தனர். நான்கு பாடல்கள் சண்டைப்பயிற்சி என ‘பாலைநிலம்’ திரைப்படம் வெகு விரைவில் வெளியிடப்படும் அனைவரும் எமது கலைப்படைப்பிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான யூட் சுகி தெரிவித்தார்.

இசை வெளியீட்டு நிகழ்வில் படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர்.காந்தன் , நடிகை சாயா, திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.