அனல் பறக்கும் பிரசாரத்தில் நடிகை ரோஜா!!

706

ROja

நடிகை ரோஜா வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நகரி சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதை முன்னிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

ஆந்திரா மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டதையடுத்து 2 மாநிலங்களுக்கும் மக்களவைத் தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடத்தப்படவுள்ளது. இந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நகரி சட்டசபை தொகுதியில் நடிகை ரோஜா போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அவர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீடு வீடாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் கட்சி தொண்டர்கள் மற்றும் பெண்களும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரசாரத்தில் ரோஜா பேசுகையில், நெசவாளர்கள் நிரம்பிய நகரி தொகுதியில் அவர்களுக்காக நெசவு பூங்கா அமைத்து தருவேன்.
மேலும், தமிழகத்தை போல நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்வேன் என்றும், தடையில்லா மின்சாரம் பெற வய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் எனவும் பேசியுள்ளார்.