வகுப்பறையில் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஆசிரியை!!

692

Abuseபாடசாலை வகுப்பறையில் ஆசிரியை ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் புன்டி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடக்கப் பள்ளியில் 20 வயது பெண் ஆசிரியை ஆக பணிபுரிகிறார். அப்பள்ளியில் 2 ஆசிரியைகளும், ஒரு சமையல்கார பெண்ணும் உள்ளனர்.

நேற்று முன்தினம் காலை 9.30 மணி அளவில் ஆசிரியை பள்ளி வகுப்பறையில் தனியாக இருந்தார். அப்போது அங்கு தயாராம், கோட்டு சிங், ஹரிசிங், பாபுலால் ஆகிய 4 பேர் தனியாக இருந்த ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் இவர்கள் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 50 கி.மீட்டர் தூரத்தில் இருப்பது அவர்களின் கைப்பேசி மூலம் தெரியவந்துள்ளது.

எனவே, அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என பொலிசார் தெரிவித்தனர்.