லட்சுமிமேனனின் ரகசியங்களை போட்டுடைத்த விஷால்!!

583

Vishal, Lakshmi Menon @ Pandiya Nadu Audio Launch Photos

நான் சிகப்பு மனிதன் படத்தில்தான் அதுவரை கிளாமர் பக்கமே தலைவைத்து படுக்காமல் இருந்த லட்சுமிமேனனை சற்று கிளாமராக நடிக்க வைத்ததோடு, உதட்டு முத்தக்காட்சியிலும் நடிக்க வைத்து பரபரப்பு கூட்டினார் விஷால்.

ஆனால் யாராவது லட்சுமிமேனன் அந்த படத்தில் கிளாமராக நடித்திருக்கிறார் என்று சொன்னால், டென்சனாகி விடுகிறார்கள். அந்த படத்தில்தான் அவர் நகரத்துப் பெண்ணாக நடித்தார். அதனால் அதை கிளாமர் என்று சொல்ல முடியாது, சாதாரண பெண்களைப் போல்தான் இருந்தார் என்று சொல்லும் விஷால், என்னைப்பொறுத்தவரை லட்சுமிமேனன் சாதாரண நடிகையல்ல. ரொம்ப வித்தியாசமான நடிகை என்கிறார்.

அதாவது, இந்த படத்துக்காக தண்ணீருக்கு அடியில் நாங்கள் நடிக்க வேண்டிய காட்சியை 8 மணி நேரம் தண்ணீருக்குள் மூழ்கியபடி நடிக்க வேண்டும். நாங்கள் உட்பட கமராமேன், இயக்குனர் என அனைவருமே உள்ளே இருந்தோம்.

அப்போது குளிரில் நடுங்கி விட்டார் லட்சுமிமேனன். அதுவும் முத்தக்காட்சியில் முதன்முதலாக நடிக்கிறார். இருப்பினும் அவரிடம் எந்த சலனமும் இல்லை. அந்த கரக்டராகவே மாறி நடித்தார். அவரை தவிர வேறு எந்த நடிகைகளாக இருந்தாலும் இந்த மாதிரி தண்ணீருக்கு அடியில் முத்தக்காட்சி என்றால் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்.

அதோடு இன்னொரு காட்சியிலும் அப்படித்தான். நான்கு நாட்களாக கொட்டும் மழையில் நனைந்து கொண்டே நடித்தார். சில சமயங்களில் அவரை அறியாமல் அவரது உடம்பு குளிரினால் நடுங்கும். அப்போது அவரிடம் ரொம்ப கஷ்டமா இருக்கா என்று கேட்டால், அது ஒன்னுமில்லை சார். பரவாயில்ல டேக் போகலாம் என்று சொல்வார். அந்த வகையில் எனது வாழ்வில் இந்த அளவுக்கு நடிப்புக்காக எந்த கஷ்டங்களையும் தாங்கிக்கொள்ளக்கூடிய நடிகையை நான் பார்த்ததில்லை என்கிறார் விஷால்.