மனைவியால் துன்புறுத்தல் பொறுக்க முடியாமல் மரத்தில் குடியேறிய கணவன்!!

510

மரத்தில்..

குடும்பச் சண்டையின் போது மனைவி அடிப்பதைத் தாங்க முடியாமல் கணவர் மரத்தில் ஏறி அமர்ந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. மனைவியுடனான சண்டைக்கு பின்னர் ராம் பிரவேஷ் என்பவர் அங்குள்ள மரத்தில் ஏறி தப்பி பிழைத்துள்ளார்.



80 அடி உயரமுள்ள மரத்தில் இப்போது அவர் ஏறி அமர்ந்துள்ளார். இதனை அடுத்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினர். ராமின் மீதுள்ள அன்பினால் அல்ல.

மறுபுறம், அவர், 80 அடி உயரத்தில் இருந்தால், அவர் அருகில் உள்ள அனைத்தையும் பார்க்க முடியும் என்றும், இது அண்டை வீட்டாரின் தனியுரிமையில் தலையிடுவதாகவும் அப்பகுதியினர் சுட்டிக்காட்டினர்.

ஏற்கனவே, அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள், ராம் தங்களை எட்டிப்பபார்ப்பதாக புகார்களை எழுப்பத் தொடங்கினர். ஆனால், ராம் மரத்தில் இருந்து கீழே இறங்காததால், அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தனர்.

ராமின் புதிய குடியிருப்பை வீடியோவில் பதிவு செய்துவிட்டு திரும்பியதைத் தவிர போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

ராமுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த 6 மாதங்களாக சண்டை நடந்து வந்தது. மரத்தின் உச்சியில் இருப்பிடம் அமைத்து, அங்கு உணவு மற்றும் தண்ணீரை கயிறு கட்டி கொண்டு செல்வது வேடிக்கையாக அமைந்துள்ளது.