கணவர் கண்முன்னே 3 பேர் கும்பலால் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்!!

605

abuse

மும்பையில் கணவரின் முன்னே 3 நபர்களால் மனைவி பலாத்காரம் செய்யப்பட்டதில், பாதிக்கப்பட்ட பெண் தற்போது சுயநினைவை இழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மும்பை கோரேகாவ் கிழக்கு ஆரே காலனி குடிசை பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த வேல்பாண்டி என்பவருக்கு அந்த பெண் மீது ஏற்பட்ட மோகத்தால் அந்த பெண்ணை அடைய திட்டம் போட்டுள்ளார்.

இதனையடுத்து, அந்த பெண் தனது கணவருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, வேல்பாண்டி மற்றும் நண்பர்கள் இருவரும் வீட்டினுள் நுழைந்து கதவை பூட்டியுள்ளனர். மனைவியின் சத்தம்கேட்டு எழுந்த கணவரை 3 பேரும் அடித்ததில் வலி தாங்க முடியாமல் அவர் சுருண்டு கீழே விழுந்துள்ளார்.

பின்னர் வேல்பாண்டி உள்பட 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கணவரின் கண்முன்னே பலாத்காரம் செய்துள்ளனர். அந்த அதிர்ச்சியில் பெண் மயக்கம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து, பெண்ணின் கணவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, இச்சம்பவம் குறித்து பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து, உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த வேல்பாண்டியை கைது செய்துள்ளனர்.
மேலும் தலைமறைவான அவரது நண்பர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் சுயநினைவை இழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.