படப்பிடிப்பில் விபத்து : நடிகர் விஷால் வைத்தியசாலையில் அனுமதி!!

534

vishal-poojaiவிஷால் கதாநாயகனாக நடிக்க, ஹரி இயக்கம் பூஜை படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்திற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் 1 கோடி செலவில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அந்த அரங்கில் விஷால் ஸ்டண்டு நடிகருடன் மோதும் சண்டைக்காட்சி நேற்று படமாக்கப்பட்டது.

ஸ்டண்டு மாஸ்டர் கனல் கண்ணன் அந்த சண்டைக்காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார். விஷால் ஒரு ஸ்டண்டு நடிகரை தனது வலது கையினால் ஓங்கி அடிப்பது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஸ்டண்டு நடிகர் விலகிக்கொண்டதால் விஷாலின் கை ஒரு தகரத்தில் பட்டு ரத்தம் கொட்டியது. அவருடைய நடுவிரலின் சதை கிழிந்தது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

விஷால் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய வலது கைவிரலில் 14 தையல்கள் போடப்பட்டன. விஷால் ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று வைத்தியர்கள் கேட்டுக்கொண்டார்கள்.