இத்தாலியில் புத்தரின் பெயரில் இயங்கிவரும் மதுபானக்கடைக்கு இலங்கையர்கள் எதிர்ப்பு!!

521

buddha-bar

இத்தாலியில் இயங்கி வரும் மதுபான கடையொன்றுக்கு அந்நாட்டில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கௌதம புத்தரை இழிவுபடுத்தும் வகையில் இந்த மதுபானக் கடைக்கு பெயரிடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த கடைக்கு புத்தா பார் என பெயரிடப்பட்டுள்ளது.

கடையின் பெயர்ப் பலகையில் புத்தா என எழுதப்பட்டுள்ளதுடன், புத்தரின் உருவவும் பொறிக்கப்பட்டு உள்ளதாக இத்தாலி வாழ் இலங்கையர்கள் விசன் வெளியிட்டுள்ளனர். அண்மையில் இந்த புதிய மதுபானக் கடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மதுபானக் கடைக்குச் செல்ல வேண்டாம் என இத்தாலி வாழ் இலங்கையர்கள் கோரியுள்ளனர். இத்தாலியின் பார்மாவின் சாலா பகான்ஸா என்னும் இடத்தில் இந்த மதுபானக் கடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மதுபானக் கடைக்கு எதிர்ப்பை வெளியிடுமாறு இத்தாலி வாழ் இலங்கையர்கள் அந்நாட்டுக்கான இலங்கைத் தூதரகத்திடம் கோரியுள்ளனர்.