இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 34 கிலோ தங்கம் சென்னையில் மீட்பு!!

617

GOld

இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 33.35 கிலோ கிராம் தங்கம் சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள வீடொன்றில் இருந்து வருமான வரி அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது இந்த தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் சந்தைப் பெறுமதி சுமார் 10 கோடி இந்திய ரூபாய்கள் என்றும் இலங்கை பெறுமதியில் சுமார் 22 கோடி ரூபா என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இவ்வாறு மீட்கப்பட்ட தங்கத்தில் அதிகமானவை 24 கரட் தரம் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக இந்த தங்கம் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.