வெளிவரும் முன்பே விருது வாங்கிய கோச்சடையான் திரைப்படம்!!

615

Kochadayan

ரஜினி நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் கோச்சடையான். மோஷன் கேப்சர்ஸ் என்ற தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கியுள்ளார்.

இதுவரை இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக மோஷன் கேப்சர்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய படமாக்கிய சௌந்தர்யாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் என்.டி. டிவி இந்த வருடத்திற்கான சிறந்த தொழில்நுட்ப பனோரமா விருதுக்கு சௌந்தர்யாவை தேர்வு செய்துள்ளது. இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் சௌந்தர்யாவுடன் அவரது அம்மாவான லதா ரஜினிகாந்தும் கலந்து கொண்டார்கள். சௌந்தர்யாவுக்கு பொலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் விருது வழங்கி கௌரவித்தார்.

கோச்சடையான் படம் வெளியாவதற்கு முன்பே ஒரு விருது வாங்கியுள்ளது. படம் வெளிவந்த பிறகு எத்தனை விருது வாங்குமோ என இந்திய திரையுலகமே அதிர்ச்சியோடு காத்துக் கொண்டிருக்கிறது.