டோச் லைட் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்!!

1946

torch light

பலாங்கொடை – மெத்தகந்த – பெருந்தெனிய பகுதியில் மின்விளக்கு (டோச் லைட்) வெடித்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

வீட்டு முற்றத்தில் இருந்த மின் விளக்கு ஒன்றை, அந்த வீட்டின் சிறுவர் எடுத்துச் சென்று அவர்களின் தந்தையிடம் கொடுத்துள்ளனர். அதனை அவர் சோதிக்க முற்பட்டபோதே குறித்த மின்விளக்கு வெடித்ததாக தெரியவந்துள்ளது.

இன்று காலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

14 வயது சிறுவன், 25 வயதுடைய யுவதி மற்றும் அவர்களது தந்தையான 52 வயதான ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.