ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு!!

909

Train

குருணாகல், பொத்துஹெர ரயில் நிலையத்திற்கு அருகில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 25 000 இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம அறிவித்திருந்தார்.
இதனடிப்படையில் ரயில்வே திணைக்களத்தின் ஊடாக இந்த இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என திணைக்களத்தின் வணிக அத்தியட்சகர் பீ. டப்ளியூ. எஸ்.சிசிர குமார தெரிவித்தார்.

பொத்துஹெர ரயில் நிலையத்திற்கு அருகில் கடந்த 29 ஆம் திகதி இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்து குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.