
கேரளாவில் பாலியல் வன்முறைக்கு ஆளான 84 வயது மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், சவாரா பகுதியில் தனியாக வாழ்ந்து வந்த மூதாட்டி நேற்று முன்தினம் தனது வீட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்தார்.
திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது உடலை பரிசோதித்த வைத்தியர்கள் மயக்க நிலைக்கு செல்லும் முன்னர் அந்த மூதாட்டி பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிசார் இந்த கொடூர சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க அந்த மூதாட்டி வசித்து வந்த வீட்டின் அருகே விசாரணை நடத்தி வருகின்றனர்.




