தன்னிலை மறந்து தவிக்கும் நபரின் சோகக் கதை!!

650

இங்கிலாந்தில் ஒரே கத்தி குத்தால், தனது செயல்களை இழந்து தவிக்கும் மனிதனின் வாழ்க்கை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பிளாக்பூல் நகரத்தில் தாமஸ் ஃபில்ட் (27) என்ற நபர் ராபட்ஸ் (25) என்பவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் தரையில் விழுந்த ராபர்ட்ஸின் தலையில் பலமாக அடிபட்டதால் அவரின் மண்டை பிளந்தது.

பின்னர், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு நொறுங்கிய மண்டையை சிகிச்சை செய்து நீக்கி உள்ளனர். தற்போது ராபட்ஸ் நடக்கவும் முடியாமல், பேசவும் முடியாமல், உணவினை குழாயின் மூலம் சாப்பிடும் நிலைமைக்கு ஆளாகியுள்ளார். மேலும் ராபட்ஸ், மரபணு வளர்ச்சி குறைபாடுள்ளவர் என்பது குறிப்பிடதக்கது.

இதனைத் இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், ராபட்ஸ் அதிகமாக என்னோடு வாக்குவாதம் செய்ததால் இந்த செயலை செய்தேன் என்று பில்ட் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த குற்றத்திற்காக பில்ட்டுக்கு 20 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

U1 U2 U3