மணக்கோலத்தில் காண வேண்டிய மகளை இழந்துவிட்டோம் : கதறும் சுவாதியின் பெற்றோர்!!

949

Swathi

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியான சுவாதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சுவாதி என்னும் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சுவாதி, பெங்களூருவில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவரது உடலைப் பெறுவதற்காக தந்தை ராமகிருஷ்ணனும், தாயார் காமாட்சி தேவியும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சுவாதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு சில தினங்களே இருந்துள்ள நிலையில் மகள் இறந்ததை எண்ணி அவரது பெற்றோர் கதறி அழுதுள்ளனர். பின்னர், சுவாதியின் உடல் அவசரஊர்தி மூலம் ஆந்திர மாநிலம் குண்டூருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுவாதிக்கு பொறியியல் பட்டப் படிப்பு முடித்த உடனே வேலை கிடைத்ததால் திருவனந்தபுரத்தில் 3 மாதப் பயிற்சி மேற்கொண்டு பெங்களூரில் கடந்த மாதம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

மேலும் முதல் மாத சம்பளத்தில் தனது பாட்டிக்கு பிடித்த பொருட்களை எல்லாம் ஆசையாக வாங்கிக் கொண்டு திருமணக் கனவுகளுடன் ஊருக்கு புறப்பட்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.