எங்களுக்கு பயமா இருந்துச்சு, நாங்க போக வேண்டாம் என்றுதான் கூறினோம் : மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற பெண்ணின் பெற்றோர்!!

633

செங்கல்பட்டில்..

செங்கல்பட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ரக்சயா மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சந்தித்துள்ளார். தமிழக மாவட்டம் செங்கல்பட்டைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியின் மகள் ரக்சயா. கல்லூரி மாணவியான இவர் ஜெய்ப்பூரில் நடந்த மிஸ் தமிழ்நாடு அழகிப் போட்டியில் கலந்துகொண்டார்.



20 வயதான ரக்சயா ஆயிரம் மொடல்களுக்கு இடையேயான போட்டியில் அழகிப் பட்டத்தை தட்டிச் சென்றார். சிறுவயது முதலே வறுமையில் வளர்ந்த ரக்சயா, தனது படிப்பு செலவுக்கு பகுதி நேர வேலை செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது அடுத்ததாக மிஸ் இந்தியா பட்டத்தையும் வெல்வேன் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த நிலையில் ரக்சயா பெற்றோர் கூறுகையில், ‘அவளுக்கு விளையாட்டில் மிகவும் ஆர்வம், படிப்பில் சிறந்து விளங்குவார். அழகிப் போட்டிக்கு போறேன்னு அவள் கூறும்போது எங்களுக்கு பயமாக இருந்தது. போக வேண்டாம் என்றுதான் கூறினோம்.

ஆனால், எனக்கு நீங்கள் தடையாக இருக்கிறீங்க.. எனக்கு பிடிச்சத தானே நான் செய்ய முடியும். எனக்கு பிடிக்காததை செய்யுன்னு சொல்றீங்க.. அப்படீன்னு எங்ககிட்ட சொல்லுவா.. சில சமயம் எங்களிடம் சொல்லாமலே போட்டிகளுக்கு சென்றுவிடுவாள். இன்றைக்கு இங்கே போட்டி இருக்குன்னு கூட சொல்லமாட்டா.

ஏன்னா நாங்க தடையா இருப்போம் என்று நினைப்பா.. அப்புறம் போயிட்டு போன் பண்ணுவா.. பிறகு தான் எங்களுக்கு புரிந்தது. அவள் விருப்பப்படி எதுவேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் என்று விட்டுவிட்டோம்’ என தெரிவித்துள்ளனர்.