மீண்டும் ரஜினியுடன் கலக்கப்போகும் சந்தானம்!!

467

Santhanam, Rajinikanth at YG Mahendran Drama Festival Stills

கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் லிங்கா படத்தின் பூஜை சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அம்பரீஷ் மற்றும்அவரது மனைவி முன்னிலையில் நேற்று மைசூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சமீபத்தில் கூட ரஜினிக்கு வில்லனாக சுதீப் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வந்திருந்தது. இப்போது இந்த படத்தை பற்றிய இன்னொருசெய்தி வெளிவந்துள்ளது. காமெடியனாக இனி நான் நடிக்கமாட்டேன் என்று கூறி வந்த சந்தானம் இப்படத்தில் நடிக்க உள்ளாராம்.

இவர் ஏற்கெனவே சங்கர் இயக்கத்தில் வெளிவந்த எந்திரன் படத்தில் ரஜினியுடன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் இது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை என்று சொல்லலாம்.