பொலிஸாரிடம் நியாயம் கேட்டு மரத்தில் ஏறி உண்ணாவிரதம் இருக்கும் நபர்!!

709

Tree

பொலிஸாரிடம் இருந்த தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என தெரிவித்து, நபர் ஒருவர் மரத்தில் ஏறி உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு இன்று காலை இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

சகோதரருடன் ஏற்பட்ட பிரச்சினை ஒன்று சம்பந்தமாக அவருடன் பேச வீட்டிக்கு சென்ற போது தன் மீதும் தனது மகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இது பற்றி மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதும் இதுவரை பொலிஸார் விசாரணைகளை நடத்தவில்லை எனவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நபர் கூறியுள்ளார்.

இதனால் தனக்கு நியாயம் வழங்க வேண்டும் எனக் கோரி தான் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.