நடனமாடும் போது திடீரென மயங்கி விழுந்து இறந்த 21 வயது இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

590

குஜராத்தில்..

சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சியில் ஆடிக் கொண்டிருந்த நடுத்தர வயது நபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன் ஜம்முவில் மேடை ஒன்றில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய மாநிலம் குஜராத்தில் 21 வயது இளைஞர் ஒருவர், நடனமாடும் போது திடீரென மயங்கி விழுந்து இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குஜராத் மாநிலம் தாராப்பூரில் நவராத்திரியை முன்னிட்டு கார்பா எனும் பாரம்பரிய நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் விரேந்திர சிங் (21) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பலரும் உடனடியாக மருத்துவமனைக்கு விரேந்திர சிங்கை கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இதேபோல் மராட்டிய மாநிலத்திலும் நடனமாடிக் கொண்டிருந்த 35 வயது நபர் ஒருவர் மரணமடைந்தார்.

அவரது மரணச் செய்தியை கேட்ட அவரது தந்தையும் ஓரிரு மணிநேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அண்மை காலமாக இதுபோன்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக நடனமாடும் நபர்கள் திடீரென சுருண்டு விழுந்து இறக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.