
சர்வதேச T20 தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் சர்வதே T20 போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட ஆண்டு இறுதி தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) துபாயில் நேற்று வெளியிட்டது.
இதில் T20 போட்டி ஆண்டு இறுதி தரவரிசையில், இந்திய அணி 131 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. ஆனால் டெஸ்ட் தரவரிசை 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
சமீபத்தில் வங்கதேசத்தில் முடிந்த T20 உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் இலங்கையிடம் தோல்வி கண்ட இந்தியா, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
கடந்த 12 மாதங்களில் இந்திய அணி, ஒரே ஒரு T20 போட்டியில் மட்டும் தோல்வி அடைந்ததால் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. நான்கு போட்டியில் தோல்வி கண்ட இலங்கை அணி 130 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.





